வணக்கம்.
செக்கு எண்ணெய் பற்றி அனைவரும் அறிந்து இருப்பீர்கள்.
ஆனால் நாங்கள் இங்கு சொல்லவிருப்பது ஒரு வரலாறு.
செக்கும் அதனுடன் பிணைந்த எங்களுடைய வாழ்க்கையும்.
சிலருக்கு செக்கு என்பது ஒரு சிறு தொழில். ஆனால் எங்களுக்கோ குலத்தொழில் குலதெய்வம் போல் போற்றி வணங்கப்படும் தொழில்.
எங்களை பற்றி:
1960ல் செக்கு எண்ணெய் வியாபாரம் சுறுசுறுப்பாக ஓடி கொண்டிருந்த காலம் அது. மாநிலத்திற்கு ஏற்றார் போல் எண்ணெயின் விதம் மாறியது ஆனால் தயாரிக்கும் முறை மாறவில்லை.
A.A ஆயில் மில் என்னும் பெயரோடு திரு.அண்ணாமலை செட்டியார் – அமிர்தம்மாள் அவர்களால் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கி இன்று வரை எங்களால் நடத்தப்பட்டு வருகின்றது.
அவர் காலங்களில் காலை 3 மணிக்கு எழுந்து குளித்து கடவுளான அண்ணாமலையாரை வணங்கி பின் தனது செக்கு மேட்டுக்கு செல்வார்.
அது என்ன செக்கு மேடு ? ஆம் நாங்கள் வாழ்ந்த இடத்தில் எங்களை சுற்றிலும் சுமார் 10 முதல் 15 செக்குகள் இயங்கின எனவே அந்த காலத்தி அவ்விடத்தை செக்கு மேடு என கூறப்பட்டது.
4 மணி அளவில் தன்னுடைய செக்குடன் காளை மாட்டினை இணைத்து பூட்டி. அந்த காளை மாட்டிற்கு ஒரு சக்கை கடலை புண்ணாக்கை ஊட்டி விட்ட பின் அந்த காளை மாடு உற்சாகத்துடன் தன் வேலையை தொடங்கும். அரை மூட்டை கடலை பயிர் (40 கிலோ) செக்கில் கொட்டி காளை மாட்டினை ஓட்டி தன்னுடைய உற்பத்தியை தொடங்குவார்.
காளை மாடு சுற்ற தானும் சேர்ந்து சுற்றி கடலை பயிரை செக்கினுள் தள்ளுவார். சுமார் 30 நிமிடம் கழித்து எண்ணெய் கடலையில் இருந்து பிரிந்து வெளி வர ஒரு பார்த்திரம் கொண்டு அதை சேமிப்பார்.
ஒரு 40 கிலோ பயிரை அரைக்க 4 மணி நேர உழைப்பு தேவைப்பட்டது
காலை 9 மணிக்கு மேல் சூரியன் வெயில் அதிகம் என்பதால். காளைகளை அவிழ்த்து கொட்டகையில் கட்டி அவைகளுக்கு தேவையான உணவினை வழங்கி தானும் சற்று ஓய்வு எடுத்துவிட்டு தனது விற்பனையை மற்றும் கொள்முதலை தொடங்குவர்.
மீண்டும் மதிய உணவிற்கு பின்பு தனது எண்ணெய் உற்பத்தியை தொடங்குவர். அதிக எண்ணெய் தேவைப்படும் காலங்களில் இரவு நேரங்களில் எனது பாட்டி மாட்டு செக்கு ஒட்டிய காலங்களும் உண்டு.
இவ்வாறு நாட்கள் சென்று கொண்டு இருக்க,எனது தந்தை எனது தாத்தாவின் வின் செக்கு தொழிலை பின்தொடர்ந்தார். ஆனால் என் தந்தை தொழில் துடங்கிய சில காலத்திலேயே மாட்டு செக்கு மறைய தொடங்கி விட்டது.
1980ல் பவர் கணி என்னும் செக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது உரல் அல்லது அடி கல்லை மண்ணில் புதைத்து விட்டு எலக்ட்ரிக் மோட்டார் மூலம் சக்தி கொடுத்து உலக்கையை சுற்றவைத்தனர். இதனால் செக்கு எண்ணெய் தயாரிப்பு இரு மடங்கு உயர்ந்தது.
ஆனால் இந்த செக்கை இயக்கும் நேரத்தில் மிகவும் கவணம் உடன் இருக்க வேண்டும் காரணம் உலக்கை சுழல்வதால் நம் சற்று கண் இமைத்தாலும் உலக்கை நமது தலையில் அடி படும் நிலை ஏற்படும்.
பின்னர் 1987 விவேக் என்னும் கம்பெனி விவேக் என்னும் பெயரோடு ஒரு செக்கினை தயாரித்தது. அதுவே நாம் இன்று வரை செக்கு எண்ணெய் தயாரிக்க உபயோக படுத்துகிறோம்.
இந்த செக்கில் அடிக்கல் (அ) உரலை எலக்ட்ரிக் மோட்டார் கொண்டு சுற்றவைத்தனர் உலக்கை ஒரு இடத்தில் இருக்குமாறு வடிவமைத்தனர். எனவே இந்த செக்கில் எண்ணெய் தயாரிப்பது சற்று சுலபமாக இருந்தது.
இவ்வாறு நாட்கள் போய் கொண்டு இருக்க 1995கலில் செக்கு எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்து இருந்தது. ஆம் பாமாயில் மார்க்கெட், வெளி நாடுகளில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் செக்கு எண்ணெய் உற்பத்தியாளர்கள் தொழில் நலிந்து போனது சிலர் தொழிலை மேற்கொண்டு நடத்த முடியாமல் உடைந்தும் போனார்கள்.
பலர் அவர்களது தொழிலை மாற்றிக்கொண்டனர். செக்கு மேட்டில் இருந்த செக்குகள் ஒன்றின் பின் ஒன்றாக காணாமல் போயின சிலர் மட்டுமே எஞ்சி இருந்தனர் அதில் நாங்களும் ஒருவர்.
2012 பல மருத்துவர்கள் செக்கு எண்ணையை பயன்படுத்த சொல்லி பரிந்துரைத்தனர். மக்கள் செக்கு எண்ணெய் எங்கு உள்ளது என தேடி அலைந்தனர். சிலர் இதை பெரும் லாபம் ஆக்க என்ணி அதிக விலைக்கு விற்பனை செய்தனர். இன்னும் சிலரே போலியான எண்ணையை செக்கு எண்ணெய் என்று குறைந்த விலையில் விற்றனர்.
ஆனால் எங்களை போல் பாரம்பரிய முறையில் தயாரிப்பவர்களை மக்கள் சற்று மறந்து விட்டனர். எனிலும் நாங்கள் உங்களுக்காக சிறந்த தரத்துடன் குறைந்த விலையில் செக்கு எண்ணெய் தர காத்துகொண்டு இருக்கிறோம்.
என்றும் உங்களுடன்
A.A ஆயில் மில்